அரியலூரில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அரியலூரில் 168 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அரியலூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பணியில் அரசு தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ந்தேதி முடிவானது.
இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டுமே இயங்கின. இதனால் 8 பேருடன் ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர், சிவப்பு மண்டலமாக மாறியது.
அரியலூரில் இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 168 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் பலர் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சென்றவர்கள் என தெரிய வந்துள்ளது.