சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது; தமிழக அரசு
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
எனினும், சென்னையில் அதிக அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதுபற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.