மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்- சென்னையில் மேலும் 266 பேருக்கு கொரோனா
சென்னையில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விழுப்புரத்தில் இதுவரை 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.