சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி
சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 30 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றில் இருந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஏற்கனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது.
இதேபோன்று, துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.