ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2020-05-03 13:19 GMT
சென்னை, 

ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*தொழிற்சாலைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்"

*சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை

*சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்"

* பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக்  உள்ளிட்ட பணியாளர்கள் அனுமதி பெற இணையதளம் அறிவிப்பு

* http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் அனுமதி பெறலாம் - சென்னை மாநகராட்சி

* "நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்"

 "கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும்"

*200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும்"

மேலும் செய்திகள்