தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா ; மேலும் 77 பேர் பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 911 ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
இன்று மாலை தலைமைச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.