மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல் அமைச்சர் வேண்டுகோள்

சர்வதேச மகளிர் தின பரிசாக மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-08 15:20 GMT
மதுரை,

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.  அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, சர்வதேச மகளிர் தின பரிசாக, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்