பயன்படுத்தப்படாத வகுப்பறைகளை சத்துணவு சாப்பிடும் கூடங்களாக மாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை

பயன்படுத்தப்படாத வகுப்பறைகளை சத்துணவு சாப்பிடும் கூடங்களாக மாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Update: 2020-03-08 00:50 GMT
சென்னை, 

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் எளிதில் உணவு அருந்தும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் சேதமடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத வகுப்பறைகளை தயார்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்று சமூக நலத்துறை ஆணையர் பள்ளிக்கல்வி துறை இயக்குனரகத்துக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேதமடைந்து, பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை உணவு அருந்தும் கூடங்களாக மாற்ற, அதன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சேதமடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளின் விவரங்களை jdss-ed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்