விமான நிலையத்தில் அறிவிப்பு பலகை “நோய் தாக்கம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்”

சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, சுகாதாரத்துறை அமைச்சகம் சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.;

Update:2020-01-30 01:45 IST
சென்னை, 

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக நோய் தாக்கம் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்று சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, சுகாதாரத்துறை அமைச்சகம் சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 வாரங்களில் யாரேனும் சீனாவுக்கு, குறிப்பாக ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகர் வழியாக சென்று, கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய் தாக்கம் இருந்தாலோ, உடனடியாக விமான நிலையத்தில் உள்ள சுகாதாரப் பிரிவு அல்லது இம்மிகிரேசனில் தகவல் தெரிவிக்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்து சென்ற 28 நாட்களுக்குள் காய்ச்சல் மற்றும் இருமல் வந்தால், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் 24 மணி நேரம் செல்படும் 011-23978046 என்ற இலவச உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும்.

அவர்கள் யாரை மேற்படியாக தொடர்பு கொள்ளவேண்டும் என்று கூறுவார்கள். இதற்கிடையே வீடு மற்றும் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்