சூடான் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-01-05 09:47 GMT
சென்னை,

முதலமைச்சர்  பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சூடான் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் நடைபெற்ற தீ விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். 

இந்து துயரச் செய்தியை அறிந்த உடனேயே, சூடான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு பிரதமர் மோடியை 4.12.2019 அன்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உயிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராமகிருஷ்ணன், ஜெயக்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா  3 லட்சம் ரூபாய்  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்