சென்னையில் கனமழை; பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

Update: 2019-11-21 01:54 GMT
சென்னை,

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வடபழனி, வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், அயனாவரம், பெசன்ட்நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், பல்லாவரம், கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இதேபோன்று கே.கே. நகர், பள்ளிக்கரணை, குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, ராமாபுரம், மதுரவாயல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.  எனினும், சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்