தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார்.
சென்னை,
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார்.
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றதற்கு பின் முதல் முறையாக முதலமைச்சர் பழனிசாமி அவரை சந்தித்தார். வீட்டிற்கு வந்த முதலமைச்சர் பழனிசாமியை தமிழிசை சௌந்தரராஜன் அவரது கணவர் சௌந்தரராஜனும் வரவேற்றனர்.