டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் -தமிழக அரசு அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2019-10-03 12:59 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8.33%  போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதன்படி டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300 மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்