4 நாட்கள் தொடர் விடுமுறை: ஆயுதபூஜைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 4,265 பேருந்துகளும், திருப்பூரில் இருந்து 1165 பேருந்துகளும், கோவையில் இருந்து 620 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மோட்டார் வாகன சட்டத்தில் அதிக அபராதம் வசூலிப்பதை குறைக்க போக்குவரத்து ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.