வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Update: 2019-08-06 05:28 GMT
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் தீவிர கனமழை பெய்ய கூடும்.  சென்னையில் இன்று மேகமூட்டமுடன் காணப்படும்.  சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இது, 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாக வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்து உள்ளது.  இதேபோன்று கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்