அத்தி வரதர் தரிசனம்: பக்தர்கள் மீண்டும் அனுமதி
அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவத்திற்காக கிழக்கு கோபுர வாசல் இன்று (ஆக.3) மாலை 5 மணி வரை மூடப்பட்டிருந்தது. திருக்கல்யாணம் நடைபெற இருந்ததால் பிற்பகல் 2 மணியுடன் கிழக்கு வாசல் மூடப்படும் எனக்கூறப்பட்டது.
இதனையடுத்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் மாலை 5 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு கதவு மூடப்பட்டது. தற்போது இறைவனின் திருக்கல்யாண வைபவம் முடிந்ததையடுத்து பக்தர்கள் மீண்டும் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.