தான் படித்த பள்ளியில் மண்டியிட்டு வணங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

தான் படித்த பள்ளியின் மேடையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மண்டியிட்டு வணங்கினார்.

Update: 2019-07-03 08:47 GMT
சென்னை

தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் உள்ள ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். நேற்று அவர் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் மடிக்கணினி வழங்கினார்.

கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி, முருக தனுஷ்கோடி மகளிர் மேல்நிலை பள்ளி, பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி என்ற 3 பள்ளிகளில் வழங்கினார். அமைச்சர் ஜெயக்குமார் கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் படித்தவர் ஆவார். அப்பள்ளிக்கு சென்றபோது அங்கு  மண்டியிட்டு வணங்கினார்.

அங்கு அவர் நீண்ட நேரம் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.  மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்ட அவர், சரியான பதிலளித்த மாணவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கினார். பின்னர் அங்கிருந்த வகுப்பறைகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

மேலும் செய்திகள்