ஜே.கே.திரிபாதி டி.ஜி.பி. ஆகிறார் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் கே.சண்முகம் இன்று அரசாணை வெளியீடு
தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர், இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.;
சென்னை,
தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர், இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய தலைமை செயலாளராக நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகத்தை புதிய தலைமை செயலாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது.
கே.சண்முகம் வகித்த பதவியில் வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். அவர், தமிழகத்தின் நிதித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றுவார்.
தமிழக டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு பெற்றிருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு பதிலாக அந்த இடத்தில் புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்படுகிறார்.