தொழிலாளர் மகள் நீட் தேர்வில் வெற்றி: மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்கிறேன் - தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்கிறேன் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

Update: 2019-06-07 15:27 GMT
சென்னை,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

நீட் தேர்வில் வெற்றி பெற்ற  சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள்  மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன். 

ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்...மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்