அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை - கனிமொழி எம்.பி.

அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2019-06-06 14:55 GMT


தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வடகிழக்குப் பருவமழை பொய்த்த காரணத்தினால் நீர்நிலைகள் வறண்டு வருகிறது. சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்ததால், கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், கால்வாய்கள் முறையாக தூர்வாறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். 

தூத்துக்குடி எம்.பி. கன்மொழி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “அதிமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. பாதுகாக்க வேண்டிய காவல்துறை, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது.  சோழிங்கநல்லூர் (சென்னை) ஏரி பாதுகாக்கபட வேண்டும்,” என்று கூறியுள்ளார். வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அவருடைய டுவிட் செய்திக்கு பதில் விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்