சிறுபான்மை மக்களை காக்கும் அரணாக எப்போதும் அதிமுக விளங்கும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
சிறுபான்மை மக்களை காக்கும் அரணாக எப்போதும் அதிமுக விளங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-
சிறுபான்மை மக்களை காக்கும் அரணாக எப்போதும் அதிமுக விளங்கும். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. அதை தான் இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
இறைவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான். தமிழகத்தை ஆளலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள், அது ஒருபோதும் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.