மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு பள்ளிகள் மூலம் இந்தியை திணிக்க முயற்சி என்று கண்டனம்
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மூலம் இந்தியை திணிக்கும் முயற்சி நடப்பதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது ஒருபோதும் இந்தி திணிக்கப்படாது என்று 55 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் நேரு உறுதியளித்திருந்தார். ஆனால், அதை மீறி பள்ளிகள் வாயிலாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியை கட்டாயப்பாடமாக்கி விருப்பமில்லாத மாணவர்கள் மீதும் திணிப்பதைத் தான் பா.ம.க. கடுமையாக எதிர்க்கிறது.
மத்திய அரசும் மும்மொழி கொள்கை உள்ளிட்ட அதன் விருப்பங்களை மாநில அரசுகள் மீது திணிக்கக்கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயங்களை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் 2-வது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் நேற்று ஒப்படைத்துள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக்கொள்கையில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழி கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியை கட்டாய பாடம் ஆக்க வேண்டும்.
6-ம் வகுப்பில் இருந்து இந்தி மொழியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தி திணிப்பை எதிர்த்து கடந்த 1965-ம் ஆண்டு நடந்த மொழிப்போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்பு போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன். கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று குறிப்பிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.
இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியை திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைத்து விடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே, இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்தி திணிப்பு பற்றி உங்கள் கருத்து?
பதில்:- நான் இந்தி படங்களில் நடித்தவன். இந்தியர்கள் அவரவர் மொழியை மதித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்பது எனது கருத்து. விருப்பம் உள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக தமிழர்கள் தங்கள் மொழியை விட்டுவிட்டு இன்னொரு மொழியை இனி கற்றுக்கொள்வது கடினம். இந்தியை திணிக்கக்கூடாது என்பது வேண்டுகோள் இல்லை. இதற்கு முன்பு அழுத்தி கூறியுள்ளோம். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை கிடையாது. வேலையே கிடையாது என்பது தான் இப்போதைய நிலை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு பதவி ஏற்ற உடனேயே புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. புதிய வரைவுக்கொள்கை மக்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. இதுவரையிலும் இருமொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழகத்தில் தற்போது மும்மொழித்திட்டத்தை அமலாக்குவதன் மூலம் இந்தியை திணிப்பதற்கான முயற்சி இது என்பது வரைவு திட்டத்தில் தெளிவாகிறது. தமிழகம் உள்ளிட்ட எந்தவொரு மாநிலத்தின் மீதும் இந்தியை கட்டாயமாக திணிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு புதிதாக கொண்டு வரும் கல்விக்கொள்கை வரைவு திட்டம் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்கிறது. இது, மும்மொழித் திட்டம் என்ற பெயரில் அப்பட்டமான இந்தித் திணிப்பாகும். தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகும். எங்கள் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரியும் புதிய கல்வி கொள்கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக 8-ம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியை கடைபிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். மும்மொழி கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.