சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டு விவசாயிகளின் நிலம் அவர்களுக்கே சொந்தமாகும் வரை பா.ம.க. போராடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டு விவசாயிகளின் நிலம் அவர்களுக்கே சொந்த மாகும் வரை பா.ம.க. போராடும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், சாலைக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் இத்திட்டத்தை பா.ம.க. தொடர்ந்து எதிர்த்து வந்தது. பாதிக்கப்படும் வாய்ப்புள்ள விவசாயிகளை நேரில் சந்தித்த நான், அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து இந்தத் திட்டத்துக்கு தடை பெற்றேன். அந்தத் தடையை எதிர்த்து தான் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது.
சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 நெடுஞ் சாலைகள் இருக்கும் நிலையில், வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர், அரூர், மஞ்சவாடி வழியாக சேலம் செல்லும் தேசிய நெடுஞ் சாலையை(179 ஏ) 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் புதிய சாலை தேவையில்லை என்பதையும் எனது தரப்பு வக்கீல்கள் எடுத்துக் கூறுவர். மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தேவை இல்லை என்பதை முழு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவோம்.
ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க.வும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடக்கம் முதலே இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். சென்னை-சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவசியமானது, அதை செயல்படுத்தியே தீர வேண்டும் என்று சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேசி வந்த ஸ்டாலின், மக்களவைத் தேர்தலின் போது வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக அத்திட்டத்தை எதிர்ப்பது போல நாடகமாடினார்.
ஆனால், பா.ம.க.வோ, நானோ அப்படிப்பட்டவர்கள் அல்ல. உழவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினோம். 8 வழிச் சாலைத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, விவசாயிகளின் நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்பது உறுதி செய்யப்படும் வரை பா.ம.க. தொடர்ந்து போராடும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.