பானி புயல் காரணமாக இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை 9 விரைவு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
பானி புயல் காரணமாக இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை 9 விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் சென்னையிலிருந்து அம்மார்க்கமாக கொல்கத்தா வரையிலான ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் இயக்கும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இப்போது பானி புயல் காரணமாக இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை 9 விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட இருந்த நியூ ஜல்பைகுரி - சென்னை சென்ட்ரல், கவுகாத்தி - தாம்பரம் விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. நாளை ஹால்தியா - சென்னை சென்ட்ரல், ஹவுரா - சென்னை சென்ட்ரல், ஹவுரா - யஸ்வந்த்பூர், சென்னை சென்ட்ரல் - ஹவுரா, ஹவுரா - எர்ணாகுளம் விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. நாளை மறுநாள் தாம்பரம் - கவுகாத்தி விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.