புதுக்கோட்டையில் இன்று ஒருநாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-20 05:54 GMT
புதுக்கோட்டை,

பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

பொன்னமராவதி பதற்றத்தை தணிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்