அ.தி.மு.க. பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
இலங்கை படுகொலை மற்றும் நில அபகரிப்பு சம்பவங்களுக்கு தி.மு.க. காரணம் என்பது போல சித்தரித்து அ.தி.மு.க. சார்பில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும், தேர்தலில் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சி நடப்பதாகவும் தி.மு.க. சட்டப்பிரிவு புகார் அளித்திருக்கிறது.
சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அனைத்து ஊடகங்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை படுகொலை மற்றும் நில அபகரிப்பு சம்பவங்களுக்கு தி.மு.க. காரணம் என்பது போல சித்தரித்து அ.தி.மு.க. சார்பில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும், தேர்தலில் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சி நடப்பதாகவும் தி.மு.க. சட்டப்பிரிவு புகார் அளித்திருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த நடைமுறைகள் மற்றும் கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்ட விதிகளின்படியும் அறநெறிகள், கண்ணியம், மதம் சார்ந்த கோட்பாடுகள் போன்றவற்றில் தனி தலையீடுகள் செலுத்தி வாடிக்கையாளர்களை திசைதிருப்பிவிட கூடாது. எனவே சட்டவிதிகளின் அடிப்படையில் மேற்கண்ட 2 வீடியோக்களை ஒளிபரப்புவதை ஊடகங்கள் நிறுத்திட வேண்டும். இது மீறப்பட்டால் அது சட்டவிதிகளை மீறிய செயலாகவே கருதப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.