வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம் -சத்யபிரதா சாஹூ

வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-09 12:23 GMT
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக இதுவரை ரூ.122.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் 812 கிலோ, வெள்ளி 482 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம். வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றே மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 7782 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என கூறிய அவர், ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதி 63 ஆயிரத்து 951 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேவைப்படும் பட்சத்தில் 27 ஆயிரத்து 400 ரிசர்வ் காவல் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும், வேலூர் காட்பாடியில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையின் போது தனியார் சிமெண்ட் குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும், மாஜிஸ்திரேட் உத்தரவு பெற்ற பின் வழக்கு பதியப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்