ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகியாக தன்னை நியமிக்கக்கோரி ஜெ.தீபக் வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகியாக தன்னை நியமிக்கக்கோரி ஜெ.தீபக் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2019-04-03 21:02 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மற்றும் ஐதராபாத்தில் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளதால், அந்த சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தன்னை நிர்வாகியாக நியமிக்கக்கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், புகழேந்தி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சி.சரவணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்வாகியாக நியமிக்கக்கோரி ஜெ.தீபக் தாக்கல் செய்த வழக்கையும், இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகள் மற்றும் கடன் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக வருகிற 25-ந்தேதிக்குள் வருமான வரித்துறையினர் தங்களது நிலைப்பாட்டை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டனர்.

விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்