இந்தியா, மாலத்தீவு இடையே பண பரிமாற்ற ஒப்பந்தம்

இந்தியா, மாலத்தீவு இடையே பண பரிமாற்றம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-10-07 12:23 GMT

டெல்லி,

4 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முய்சு இன்று ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். பிரதமர் மோடியையும் முய்சு சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர், இந்தியா, மாலத்தீவு இடையே பண பரிமாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தானது. பண பரிவர்த்தனைக்காக இந்தியாவின் ரூபே கார்டு மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பண பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் மாலத்தீவில் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்து பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்