1000, 2000 வேண்டாம் 5000, 10000 கேட்டு வாங்குங்கள் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஆயிரம் இரண்டாயிரம் வாங்காதீர்கள், 5 ஆயிரம், பத்தாயிரம் கேட்டு வாங்குங்கள் என்று வாக்காளர்களுக்கு வலியுறுத்தினார். அதிமுக அரசு ஊழல் மூலம் மக்கள் பணத்தை சுரண்டி இருப்பதாகவும், அதனை தற்போது மக்களிடமே திருப்பி கொடுப்பதாகவும், இளங்கோவன் விமர்சித்தார்.