காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி
கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூவத்தூர்,
கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானது; குழந்தையின் தலை துண்டான நிலையில் உடல்பகுதி, தாயின் வயிற்றில் சிக்கியது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.