பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம் -அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2019-03-19 06:29 GMT
சென்னை,

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 

 தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  வாசித்தார். அதன்  விவரம் வருமாறு;-

* மதம் மாறுபவர்கள் ஜாதி சான்றிதழில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம்.

* காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்.
என கூறினார்.

மேலும் செய்திகள்