49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் - இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வரவேற்பு

49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-07 15:37 GMT
சென்னை,

49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். கள்ள ஓட்டில் யாரேனும், தங்களது வாக்குகளை இழந்தால், 49  P யை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்தியுள்ளது. 

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் முருகதாஸ்,  49P குறித்து தேர்தல் ஆணையம் நடத்தும் விழிப்புணர்வு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 49 P சட்டம் பற்றி முதல் முறையாக சர்கார் திரைப்படம் பேசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்