ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர் சேட் நியமனம் தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார்.

Update: 2019-03-06 20:00 GMT
சென்னை, 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார்.

கூடுதல் பொறுப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* தமிழ்நாடு போலீஸ் அகாடமி டி.ஜி.பி. ஜாபர் சேட், சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி, தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

* தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து கழக தனி அதிகாரி அருணாசலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

* உத்தரபிரதேச மாநிலத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் எஜிலியா அரசானே, சென்னை நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சிவில் சப்ளை சி.ஐ.டி. சூப்பிரண்டு சோனல் சந்திரா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சூப்பிரண்டாக (1) மாற்றப்பட்டு உள்ளார்.

மின்வாரிய விஜிலென்ஸ்

* தமிழ்நாடு கமாண்டோ படை உதவி போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* தேனி மாவட்ட தலைமையக கூடுதல் சூப்பிரண்டு பழனிகுமார், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சூப்பிரண்டாக (2) பொறுப்பு ஏற்பார்.

* தமிழ்நாடு செயலாக்கப்பிரிவு டி.ஜி.பி. ஆஷிஸ் பேங்கரா, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக முழுமையாக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்