பிரதமர் மோடி வருகை; கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-03-01 04:43 GMT
கன்னியாகுமரி,

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார்.  இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் வருகையை அடுத்து கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களாக உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களுக்கான சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி சென்ற பிறகு படகு சேவை மீண்டும் தொடங்கும்.  இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்