ஆசிரியை கொலை வழக்கு: உறவுக்கார வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்
திருவிடைமருதூர் அருகே ஆசிரியை கொலை வழக்கில் உறவுக்கார வாலிபர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் வசந்தபிரியா (வயது 25). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வசந்தபிரியாவுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்ற வசந்தபிரியா மாலையில் வீடு திரும்பவில்லை. காவிரி ஆற்றின் படித்துறையில் அவர், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பள்ளி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வசந்தபிரியா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வசந்தபிரியாவை, மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது யார்? என போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் வசந்தபிரியாவை அவரது அத்தை மகனான கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த நந்தகுமார் (25), மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும், அவர்தான் வசந்தபிரியாவை கொலை செய்ததும் தெரியவந்தது. உடனே திருப்பனந்தாள் அருகே நந்தகுமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரிடம் நந்தகுமார் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான், வசந்தபிரியாவை விட 6 மாதம் இளையவன். நானும், வசந்தபிரியாவும் காதலித்து வந்தோம். இந்நிலையில் வசந்தபிரியாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான், நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியா வேலை செய்த பள்ளிக்கு சென்றேன். பள்ளி முடிந்து வெளியே வந்த வசந்தபிரியாவிடம் பேசவேண்டும் என்று கூறினேன். அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர் வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டேன்.
கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றங்கரையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வசந்தபிரியாவை அழைத்து சென்றேன். அங்கு வைத்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வசந்தபிரியாவிடம் வலியுறுத்தினேன். அப்போதும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தபிரியாவின் கழுத்தை அறுத்தேன். அவர் இறந்து விட்டதை அறிந்ததும் நான் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி திட்டக் குடிக்கு தப்பி சென்றேன். திட்டக்குடியில் எனது உறவினர்கள் வசந்தபிரியாவை யாரோ கொலை செய்து விட்டனர் என கூறினர். நானும் ஒன்றும் தெரியாததுபோல் அவர்களுடன் கும்பகோணத்துக்கு புறப்பட்டேன்.
போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்பதை உணர்ந்த நான், எனது உறவினர்களுடன் காரில் கும்பகோணத்துக்கு வரும் வழியில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினேன். இதற்கிடையில் எங்களது கார், திருப்பனந்தாள் வந்தபோது அங்கு தயாராக இருந்த போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.