தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை தேவை இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையை அறிவிக்க தேவை இல்லை என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து உள்ளார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கட்டப்பட்டுள்ள அசாம் மாநிலத்துக்கான விருந்தினர் மாளிகை மற்றும் பொது நிர்வாக கட்டிடத்தை அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்த சோனோவால் நேற்று திறந்துவைத்தார்.
இதில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், அசாம் மாநில மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, முதலில் அசாம் முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் அங்கிருந்த அசாம் மாநில மக்களுக்கு அந்த மாநில மொழியான ‘அசாமி’ மொழியில் வணக்கம் தெரிவித்து பேசும்போது, “தமிழ் மக்களுக்கும், அசாம் மக்களுக்கும் மொழி உள்ளிட்டவற்றில் வேறுபாடு இருந்தாலும், நடைமுறைகள் ஒன்றுதான். அதற்கு உதாரணமாக தமிழ் கலாசார பண்டிகைகள் அனைத்தும் அசாம் மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது. வேலை, படிப்பு, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்காக தமிழகம் வரும் அசாம் மக்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும்” என்றார்.
அதைதொடர்ந்து அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்த சோனாவால், ‘அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி பேசினார். அப்போது அவர், “அசாம் மாநிலத்திற்கான விருந்தினர் மாளிகை மற்றும் பொது நிர்வாக கட்டிடத்தை கட்ட உதவியாக இருந்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கட்டிடம் தமிழகம்-அசாம் மாநிலத்துக்கு ஒரு பாலமாக அமையும். இது அசாம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமையும். அசாமில் அதிகமான தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அனைத்து தமிழ் மக்களும் ஒரு நாள் அசாம் வரவேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு குறித்து இதுவரை 4 கூட்டங்களை முதல்-அமைச்சர் நடத்தி இருக்கிறார். தேவையான அறிவுரைகள், மருந்துகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும்.
மாநிலத்தில் மருத்துவ அவசரநிலையை (மெடிக்கல் எமர்ஜென்சி) அறிவிக்கும்படி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அது தேவையில்லை.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. எப்படிப்பட்ட இடர்பாடாக இருந்தாலும் அதை சந்திப்பதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இருக்கிறது.
தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் தேதியை அறிவித்தாலும் அதை எதிர்கொள்வதற்கான திராணி அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. எங்களின் பங்காளி என்றார். எங்களை பொறுத்தவரை தி.மு.க. பகையாளி. ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை சந்தர்ப்பவாதம்தான். எப்போது எதை வேண்டுமானாலும் மாற்றுவார்கள். 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.