10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்
10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ஜெயக்குமா கூறி உள்ளார். #Jayakumar #AIADMK
சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயக ரீதியில் போராடலாம், அதேநேரத்தில் எல்லாவற்றிற்கும் இடம், பொருள், ஏவல் என்று ஒன்று உள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால் விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா?; விளம்பரத்திற்காக இதுபோன்று பலர் செய்து வருகின்றனர் விளம்பரத்திற்காக கோஷமிடுவதை அனுமதித்தால், விமானநிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். 10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது என கூறினார்.