கேரளாவில் பரம்புராவில் கிணற்றில் பிடிக்கப்பட்ட வவ்வால்களில் நிபா வைரஸ் இல்லை - ஆய்வு
கேரளாவில் பரம்புராவில் கிணற்றில் பிடிக்கப்பட்ட வவ்வால்களில் நிபா வைரஸ் இல்லை என ஆய்வில் தெரியவந்து உள்ளது. #Nipah
புதுடெல்லி,
கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டது. கோழிக்கோடு மாவட்டம் பரம்புராவில் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வசித்த வீட்டின் அருகே இருந்த கிணற்றில் இருந்து அதிகாரிகள், வவ்வால்களை பிடித்தார்கள். இப்போது பிடிபட்ட வவ்வால்கள் பரிசோதனை தொடர்பான முடிவை போபால் வைராலஜி பரிசோதனை மையம் தெரிவித்து உள்ளது. அதில் பரம்புராவில் கிணற்றில் பிடிக்கப்பட்ட வவ்வால்களில் நிபா வைரஸ் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.