மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த சில நாட்களுக்கு தென் மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு அரபிக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். நாளை மறுநாள் வரை மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் . இலங்கை, தென்மேற்கு வங்கக்கடலின் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.