விருதுநகர்: கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற 3 எம்எல்ஏக்கள் உள்பட திமுகவினர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற 3 எம்எல்ஏக்கள் உள்பட எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். #DMK #BanwarilalPurohit
சென்னை
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கறுப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் கவர்னர் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுபெற செல்ல உள்ளார்.
இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கவர்னர் இன்னும் அங்கு வராத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.