நல்லவனாக இருக்கலாம், மிகவும் நல்லவனாக இருக்க கூடாது: ரஜினிகாந்த் பேச்சு

நல்லவனாக இருக்க வேண்டும். ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது என காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். #RajiniKanth #Kaala

Update: 2018-05-09 15:49 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் உருவாகி உள்ளது.  இதனை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமா குரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா  நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- “  புத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்க வேண்டும், ஆனால் அதி புத்திசாலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.  கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக உள்ள கோடானு கோடி பேரில் நானும் ஒருவன். என்னுடைய வாழ்க்கையில் ஒரே கனவு நதிகள் இணைப்பு தான். தண்ணீர் பிரச்சினை என்றால் என்னை அறியாமல் ஆர்வம் வந்து விடுகிறது. என் வாழ்க்கையின் கனவும் தென்னிந்திய நதிகளை இணைப்பதே. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை போகிறேன். 

நல்லவனாக இருக்க வேண்டும். ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது. அப்படி இருந்தால் கோழை என்பார்கள். நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். என்னை ரசிகர்களாகிய நீங்களும், கடவுளும் தொடர்ந்து ஓட வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். காலா அரசியல் படம் இல்லை. படத்தில் அரசியல் இருக்கிறது. தன்னை சேர்ந்தவர்களும் மேலே வர வேண்டும் என்று நினைப்பவர் இயக்குநர் ரஞ்சித். பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்தால் உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்கள். யார் என்ன சொன்னாலும், என் பாதையில் நான் சென்று கொண்டே இருப்பேன்.  நேரம் வரும் போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும், நல்ல காலம் பிறக்கும்” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். 

மேலும் செய்திகள்