ரூ. 600 கோடி கடன் வாங்கி மோசடி ; ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளா் மீது வழக்குப்பதிவு

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளா் ரூ. 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு உள்ளது. #Aircel #CBI #IDBIBank

Update: 2018-04-26 10:34 GMT
சென்னை,

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான  சிவசங்கரன் ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் ரூ. 600 கோடி வரையிலும் கடன் வாங்கி மோசடி செய்ததாக அவா் மீது  குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்  சிபிஐ  அவா் மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.

இதற்கு முன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்க முடியாமலும்  அதிகமான கடன் நெருக்கடி காரணமாகவும் ஏர்செல் தன்னுடைய சேவையை வழங்குவதில் திக்குமுக்காடி வந்தது. 

இந்நிலையில் இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர்.  இதுபோன்ற சம்பவம் ஏா்செல் நிறுவனத்திற்கு மேலும் அவப்பெயரை ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்