விஜயகாந்த் தலைமையில் தேமுதிக கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் - கைது
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். #DMDK #Vijayakanth
சென்னை
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தற்கு கண்டனம் தெரிவித்தும், சூரப்பாவை நீக்கக்கோரியும் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டார்.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இது போல் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது.
ஆளுநர் பதவி விலக கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சியில் ஈடுபட்டனர்.