சுரப்பா நியமனத்தை கண்டித்து 20-ந்தேதி கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி விஜயகாந்த் அறிவிப்பு
சுரப்பா நியமனத்தை கண்டித்து 20-ந்தேதி கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணிநடத்தப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சுரப்பாவை நியமித்தது தொடர்பான உத்தரவை கவர்னர் திரும்ப பெற வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. கவர்னர் எங்களது இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் 18-ந்தேதி (நாளை) காலை 11 மணிக்கு, எனது தலைமையில் கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு காவல்துறையினரால் மேற்கண்ட தேதியில் அனுமதி மறுக்கப்பட்டதால், தேதி மாற்றியமைக்கப்பட்டு 20-ந்தேதி காலை 10 மணிக்குபனகல் மாளிகை அருகில் இருந்து கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.