முதல்-அமைச்சர் போட்டியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் வைகோ பேட்டி

முதல்-அமைச்சர் போட்டியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று வைகோ கூறினார்.

Update: 2018-04-11 22:00 GMT
சென்னை, 

சென்னையில் நேற்று பேட்டி அளித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம், போலீசார் தாக்கப்பட்டதற்கு ‘நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே?’ என்று கேட்டனர்.

இதற்கு வைகோ, அது ரஜினிகாந்தின் கருத்து என்றார்.

பல்வேறு விஷயங்களுக்கு கருத்து தெரிவிக்காத ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் மட்டும் பேசுவது ஏன் என்று தமிழ் அமைப்பினர் கண்டனம் தெரிவிக்கிறார்களே? என்று கேட்டதற்கு, தமிழ்நாட்டில் நடிகர்கள் மட்டுமல்ல, 20-க்கும் மேற்பட்டவர்கள் முதல்-அமைச்சர் போட்டியில் இருக்கிறார்கள். நான் அதில் எப்போதும் இருந்ததில்லை. அதை நான் விரும்பியதும் இல்லை என்று வைகோ கூறினார். 

மேலும் செய்திகள்