சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம்: நடிகர் ரஜினிகாந்த்

சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #ActorRajinikanth

Update: 2018-04-11 04:25 GMT
சென்னை,

ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம்தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை, விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 780 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  சென்னை அண்ணா சாலையில் போராட்டத்தின்பொழுது நாம் தமிழர் கட்சியினர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், சீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், போலீசார் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.  வன்முறையின் உச்ச கட்டமே சீருடையில் புணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது ஆகும்.

இதுபோன்ற வன்முறை கலாசாரத்தினை உடனே கிள்ளி எறியவில்லை எனில் நாட்டிற்கே பேராபத்து என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்