நாளை சேப்பாக்கம் மைதானம் காலியாக இருந்தால் தான் காவிரி பிரச்சினை உலகிற்கே தெரியும் - ஆர்.கே.செல்வமணி
நாளை சேப்பாக்கம் மைதானம் காலியாக இருந்தால் தான் காவிரி பிரச்சினை உலகிற்கே தெரியும் என ஆர்.கே.செல்வமணி கூறி உள்ளார். #CauveryMangementBoard #CauveryIssue
சென்னை
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை இயக்குநர் பாரதிராஜா தொடங்கினார். இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது.
துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா? என்றும் அவர் கேட்டுள்ளார்.
செல்வமணி கூறிம் போது, எங்களுடைய போராட்டம் வேறு மாதிரியான இருக்கும். என்ன மாதிரியான போராட்டம் என்பதை இப்போது சொல்ல மாட்டோம். நாளை சேப்பாக்கம் மைதானம் காலியாக இருந்தால் தான் காவிரி பிரச்சினை உலகிற்கே தெரியும் என்று கூறியுள்ளார்.
தமிழகம், கர்நாடகாவில் ஒரே அரசு அமைந்தால் தான், காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்கும் என்றால் மத்திய அரசு எதற்காக? - இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பி உள்ளார்.