பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னது ‘காட்டுமிராண்டித்தனமான செயல்’ நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth;
சென்னை,
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கடந்த 6-ந்தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து அவருடைய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள், பெரியார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கருத்தை வெளியிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்புகள், பெரியார் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம், சாலைமறியல் மற்றும் உருவபொம்மை எரிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
எச்.ராஜாவின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்து, ‘பெரியாரை பற்றிய கூற்று கீழ்த்தரமானது’ என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னதும், அவருடைய சிலைகளை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனமான செயல். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அதற்கு எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இதை இன்னும் பெரிதாக ஆக்க வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.