தினகரனுடன் கூட்டு சதி: அ.தி.மு.க. புகாருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தி.மு.க.வும், தினகரனும் செய்த கூட்டுச்சதி என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருப்பது பற்றி மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்டனர்.

Update: 2017-12-24 17:46 GMT
சென்னை, 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் தி.மு.க.வும், தினகரனும் செய்த கூட்டுச்சதி என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருப்பது பற்றி மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்டனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–

தேர்தலுக்கு முந்தைய நாளில், ஹவாலா அடிப்படையில் ரூ.20 நோட்டுகளை வழங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும் அமைச்சர்களே துணை நின்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தான் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.கவைப் பொறுத்த வரையில் நாங்கள் ஜனநாயகத்தோடு தான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்